Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2022 14:30:36 Hours

12 வது படைப்பிரிவினால் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

கதிர்காமம் கோவில் பஸ்நாயக்க நிலமே அவர்களின் நிதியுதவியுடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேட் தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவ வீரர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் பொறியியல் நிபுணத்துடன் திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு நிர்மாணித்த புதிய வீடு ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வின் போது பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் சக படையினருடன் இந்த புதிய வீட்டை நன்கொடையாளரால் வழங்கப்பட்ட நிதியுடன் மிகக் குறுகிய காலத்திற்குள் கட்டப்பட்டது. 12 வது படைப்பிரிவு தலைமையகம் 122 வது பிரிகேட் படையினர் ஊடாக அப்பகுதியில் வசிக்கும் இக்குடும்பத்தின் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு நிர்மாணத்திற்கான உதவியினை வழங்கியது.

நன்கொடையாளர் மற்றும் 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சமய சடங்குகள் பின்பு குடும்பத்திற்குத் தேவையான பல தளபாடங்களும் வழங்கப்பட்டன.