Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2022 10:58:30 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் நன்கொடையாளர்கள் மூலம் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

53 வது படைப்பிரிவின் 532 வது பிரிகேட் தளபதியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால், தெஹியத்தகண்டி, மாவனகம மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 315 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை (16) விநியோகிக்கப்பட்டது.

532 வது பிரிகேட் தளபதியின் வேண்டுகோளின் பேரில் 'யுதுகம' தொண்டு நிறுவனம் மற்றும் பல நன்கொடையாளர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் என்பன வழங்கப்பட்டன. தலா ரூபா. 1,500.00 என்ற அடிப்படையில் 'யுதுகம' அமைப்புக்கு இத்திட்டத்திற்கான முழு செலவு சுமார் ரூபா 472,500.00. ஆகும்.

532 வது பிரிகேட் தளபதி கேணல் எஸ்.பி விக்ரமசேகர அவர்களின் அழைப்பின் பேரில் முதலாம் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புலமை பரிசில்களை வழங்கி வைத்தார். மேலும், வலயக் கல்விப் பணிப்பாளர், மாணவர்களின் பெற்றோர்கள், 532 வது பிரிகேட் மற்றும் பொதுமக்கள், அழைப்பாளர்களாக அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் இத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.

இப்பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும், படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.