Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2022 10:54:05 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் மன்னார் பிரதேச வாசிகளுக்கு சித்தார்த்த அறக்கட்டளை நிவாரணப் பொதிகள்

இராணுவத்தினரால் ஒருங்கிணைப்பில் வண. தலகல சுமணரதன தேரோவின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் டன்ங் நகாக் பூஹய் மற்றும் கீ மெங் வரையறுக்கப்பட்ட அமைப்பி (Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited) ஆகியவற்றின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் வெங்கல செட்டிகுளம் பிரதேசங்களில் பொருளாதார சிரமங்களுடன் வசிக்கும் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (19) உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்கவின் மேற்பார்வையில், தெரிவு செய்யப்பட்ட 320 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரியன்பண்டி விரிச்சான் தமிழ் கலவன் பாடசாலையில் இந்த விநியோகத்திட்டம் இடம்பெற்றது. இதில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனி, 1 கிலோ கோதுமை மா, 1 மீன் டின் மற்றும் ஒரு சோயா மீட் ஆகியவை உள்ளடங்கலான தலா ரூபா 2600/= பெருமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

அதே தெற்கை சார்ந்த அறக்கட்டளை நாடு முழுவதும் உள்ள ஏழைப் பொதுமக்களுக்கு இராணுவத்தினரின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பொதிகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகிறது.

மடு பிரதேச செயலாளர் திரு கயான், 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க, 653 வது பிரிகேட் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, லெப்டினன் கேணல் தில்ஹான் கனேஹியாராச்சி, 65 வது படைப்பிரிவு சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகளுடன் பலர் இவ் விநியோக திட்டத்தில் கலந்துக் கொண்டனர்.