Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2022 10:45:06 Hours

59 வது படைப்பிரிவு படையினர் முல்லைத்தீவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவினரின் வேண்டுகோழுக்கமைவாக கொழும்பு ரோயல் கல்லூரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவ நண்பர்களான பிரசாத் லொகுபாலசூரிய, திலங்க மெடிஸ், குஷான் சத்துரங்க, டி.கே பீரிஸ், சிந்தக அபேசேகர, தீபல் சிறிவர்தன, என். பண்டார ஆகியோரின் அனுசரணையுடன் 14 திகதி பொசன் போயா தினத்தன்று நந்திக்கடல் பகுதியில் 10 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்கினர்.

இந்த போயா தினத்தில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், அதே நன்கொடையாளர்களின் ஏற்பாட்டில் இரவும் பகலும் இலவச அன்னதானம் (தன்சல) வழங்கினர்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுகளுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான பேசன், நுளம்பு வலை, குழந்தைக்கான சவக்காரம் மற்றும் உடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி சூரியபண்டார அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் கலந்துக் கொண்ட பயனாளிகளுக்கு பொருட்களை பகிர்ந்தளித்தார். 591, 592 மற்றும் 593 வது பிரிகேட்களின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பிரதேசத்தின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.