Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2022 11:05:34 Hours

தென்னிலங்கை மக்களின் மனிதாபிமான நிவாரணப் பொதிகள் முல்லைத்தீவு மக்களுக்கு

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை, களுத்துறை சாசனாரக்ஷக மண்டலம் , சிங்கப்பூர் தன் நகாக் & கீ மெங் லெங் வரையறுக்கப்பட்ட அமைப்பின் லிமிடெட் உடன் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக நிவாரணப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றது. இப்பணிகள் ஜூன் 2022 முல்லைத்தீவு கிராமங்களில் வசிக்கும் வரிய மக்களுக்கு , 05 கிலோ அரிசி, 500 கிராம் பருப்புப், 01 தேங்காய் மற்றும் 03 சோயா மீட் உள்ளடங்கலான 175 உலர் உணவுப் பொதிகளை பகிர்தளிக்கப்பட்டது. அத்துடன் வரிய குடும்பங்களின் 41 மாணவர்களுக்கு அவசியமாவைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசியுடன் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும அவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் 682 வது பிரிகேடினர் இந்த சமூகம் சார்ந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இதே செயற்திட்டத்தின் போது மாத்தளை பிட்டிங் பெலஸ் கம்பனி லிமிடட் (Fitting Palace Company Ltd) மற்றும் துபாய் ஜேஎஸ்பீசீஎல்எல்சீ கம்பனி லிமிடட் (JSBCLLC Co. Ltd) இன் உரிமையாளரின் அனுசரணையுடன் மேலும் முல்லைத்தீவு மாத்தளன் ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு 100 பொதுமக்களை அழைத்து சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும, பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் வசந்த பாலமகும்புர, பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க, 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி, 682 வது பிரிகேட் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டங்களில் இணைந்துகொண்டனர்.