Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2022 19:00:14 Hours

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்புடன் 1000 மூக்கு கண்ணாடிகள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் புத்தகங்கள் வரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

இராணுவத்தின் முயற்சியால் அவுஸ்திரேலியா'நெத்சரண' அறக்கட்டளையின் அனுசரணையுடன் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 232 வது பிரிகேடின் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர், வாகரை புனானி, வாழைச்சேனை, கிராண், செங்கலடி, இலுப்படிச்சேனை மற்றும் தொப்பிகலை உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் 600 வறிய குடும்பங்களுக்கு, 1000 மூக்கு கண்ணாடிகள் மற்றும் 50 உலர் உணவுப் பொதிகள் 2022 ஜூன் 04 ஆம் திகதி வழங்கி வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட 23 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷிவந்த குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின்படி, பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 10 தேவையுள்ள பாடசாலைகளுக்கு அவசியமான 10 பண்டல் வாசிப்பு மற்றும் எழுதும் புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. அதே திட்டத்தின் போது இராணுவத்தின் ஒத்துழைப்பை பாராட்டும் முகமாக, 140 இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இத்திட்டம் புலிபஞ்சிக்கல்லில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

232 வது பிரிகேட் படையினர், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் குறித்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஊடாக இந்த சமூக செயற்திட்டத்தை ஏற்பாடு செய்தனர். இத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா 'நேத்சரண' அறக்கட்டளை நிறுவனம் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் முழு நிதியுதவி வழங்கியது.

23 வது படைப்பிரிவு தளபதிக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா 'நேத்சரண' அறக்கட்டளையின் தலைவி திருமதி லக்கி குணசிங்க, 23 வது படைப்பிரிவு மற்றும் 232 பிரிகேட் சிவில் விவகார அதிகாரிகள், 12 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்டோர் இந்த தொண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.