Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2022 12:17:10 Hours

இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப் பொதிகள் உன்னச்சியா பொதுமக்களுக்கு வழங்கி வைப்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 231 வது பிரிகேடின் 4 வது கெமுனு ஹேவா படையணியினர், வண. தலகல ஸ்ரீ சுமணரதன தேரரின் ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூரில் உள்ள 'மெங் லெக் பவுண்டேஷன் லிமிடெட்' ஆகியவற்றின் அனுசரணையுடன் 06 ஜூன் 2022 அன்று உன்னச்சிய கனுவெல மத்திய கல்லூரியில் வைத்து உன்னச்சியா பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

23 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷிவந்த் குலதுங்க அவர்களின் பணிப்புரையின் பேரில், தற்போது பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

23 வது படைப்பிரிவின் தளபதி, 231 வது பிரிகேடின் தளபதி, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் நெருக்கமான ஆலோசனையில் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தார்.