Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2022 12:06:10 Hours

இராணுவத்தினரின் கோரிக்கையின் பேரில் சித்தார்த்த அறக்கட்டளை மூலம் தெற்கு மக்களுக்கு மேலும் நிவாரணப் பொதிகள்

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை களுத்துறையில் உள்ள சாசனரக்ஷக பலமண்டலத்துடன் இணைந்து 2022 ஜூன் 08 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை தெபரவெவ பிரதேசத்தில் வசிக்கும் 200 வரிய சமூகத்தினருக்கு அத்தியவசிய உலர் உணவுப் பொதிகளை வழங்க முன்வந்தது.

பிரதேச செயலகம் மற்றும் அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கமைக்குமாறு 122 வது பிரிகேடின் படையினருக்கு 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அறிவுறுத்தினார்.

ரூபா 1500/- மதிப்புள்ள ஒவ்வொரு பொதிகளிலும் 2.8 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, 2 கிலோ பருப்பு மற்றும் 03 சோயா அடங்கிய உலர் உணவுகள் இருந்தன.

12 வது படைப்பிரிவின் தளபதி, திஸ்ஸமஹாராமய பிரதேச செயலாளர், தெபரவெவ அரச பாடசாலையின் அதிபர், 122 வது பிரிகேடின் தளபதி, மற்றும் 122 வது பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நன்கொடை திட்டத்தில் கலந்துகொண்டனர்.