Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2022 09:00:04 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விஷேட பிலட்டூன் பாடநெறி ஆரம்பம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் முதன் முறையாக 02 மே 2022 முதல் ஜூன் 7 வரை பம்பைமடு, பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் படைக்குழுக்களுக்கான “விசேட பிலட்டூன் பாடநெறி – 2022” ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள ஒவ்வொரு படைப்பிரிவினையும் சேர்ந்த 5 பிலட்டூன்கள் பாடநெறியில் பங்குபற்றியதோடு, மனிதவளம், உபகரணங்கள், பயிற்சி மற்றும் நடவடிக்கைகளுக்கான தயார் நிலை மற்றும் காலாட் படை உறுப்பினர்களின் சண்டையிடுவதற்கான உடற் தகைமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் இப் பாடநெறியின் போது GPS தொழில்நுட்பத்தை கையாளுதல், தற்காப்பு முறைகள், நிராயுதபாணியாக போரிடுதல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, வெடிபொருட்கள் மற்றும் இடிபாடுகள், ஆயுதங்களை கையாளுதல்,துப்பாக்கிச் சுடுதல், மோதல் செயற்பாடுகள், உள்ளக பாதுகாப்பின் நடைமுறை அம்சங்கள் என்பன தொடர்பில் விரிவுரை நடத்தப்பட்டன.

பம்பைமடு பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையில் 07 ஜூன் 2022 அன்று நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாககலந்துகொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களினால் பாடநெறியில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியோருக்கான கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஆண்கள் பிரிவு – 8 பேர் அடங்கிய சிறந்த குழு – 54 வது படைப்பிரிவின் 2 ஆம் குழு

சிறந்த பிலட்டூன் தளபதி - O/71300 கெப்டன் கேடீசீஜே ஜனசிதி (11 வது கெமுனு ஹேவா படையணி)

சிறந்த சகலதுறை சிப்பாய் - S/480213 கோப்ரல் எம்பீடீஎன் சாந்த (20 வது கஜபா படையணி)

சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் - S/520569 கோப்ரல் ஆர்எம்சீஎஸ் பண்டார (4 வது விஜயபாகு காலாட் படையணி)

சிறந்த உடற் தகைமை - S/H101154 காலாட் படை வீரர் ஜேடீஆர் ஜயவீர (2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி)