Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2022 09:45:43 Hours

55 வது படைப்பிரிவினரால் யாழ். மாணவர்களுக்கு பூப்பந்தாட்ட பயிற்சி

யாழ். குடாநாட்டு இளைஞர்களின் மத்தியில் பூப்பந்தாட்ட விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2022 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி 55 வது படைப்பிரிவின் கேட்போர் கூடத்தில் பூப்பந்து பயிற்றுவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

யாழ். குடாநாட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவியரின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவித்து பாடசாலை மட்டத்திலிருந்து மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களை எட்டி இறுதியாக தேசிய மட்ட இலக்குகளை அடையச் செய்வதை நோக்கமாக கொண்டு இப்பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன.

பருத்தித்துறை, நாகர்கோவில், மருதங்கேணி, ஐயக்கச்சி, பளை, கடைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள 35 பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு நேச்சர் பார்க் விடுமுறை விடுதியில் காலை உணவு, சிற்றூண்டிகள், மதிய உணவு மற்றும் தேநீர் என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் 55 வது படைப் பிரிவின் தளபதி, மருதங்கேணி பிரதேச செயலாளர் திரு. பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு, நிகழ்வின் நிறைவில் சகலருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.