Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2022 18:03:55 Hours

மேற்கு படையினர் 'பொசன்' தின நிகழ்வுகளில் பங்கேற்பு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தலைமையகம் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தலைமையகம் ஆகியன இணைந்து (14) போதிராஜாராமய இராணுவ விகாரையில் 'சீல சமாதி' சமய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

சுமார் 2300 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து 'பௌத்தம்' என்ற தொனிப்பொருளில் மிஹிந்தலைக்கு வந்த மகிந்த தேரரை நினைவுகூரும் வகையில் நூற்றுக்கணக்கான படையினரின் பங்கேற்புடன் சமய சடங்குகள், தியானங்கள் மற்றும் பல்வேறு 'பூஜைகள்' என்பன மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும், இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.