Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2022 20:48:16 Hours

புதிய நியமனத்தை ஏற்பதற்காக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி விடுகை பெறுகிறார்

இலங்கை இராணுவ தொண்டர் படையின் 48 வது தளபதியான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக புதிய நியமனத்தை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதியின் கடமைகளிலிருந்து திங்கட்கிழமை (13) விடுகை பெற்றுக்கொண்டார்.

பதவியிலிருந்து விடுகை பெற்றுக்கொள்வதற்கான சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தளபதியவர்கள் வருகை தந்த வேளையில் படையணியின் நுழைவு வளாகத்தில் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கங்கப்பட்டதோடு, தளபதியவர்களுக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையின் பயிற்சி பொறுப்பதிகாரி பிரிகேடியர் துசித சில்வா அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்களினால் விடுகை பெற்றுச் செல்லும் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, தேசபக்தி பாடல்கள் மற்றும் வாத்திய இசைப்புக்களுடன் மரியாதையை ஏற்பதற்கான மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் இராணுவ தொண்டர் படையின் பெருமைமிக்க வரலாற்று நினைவுப் பதிவேட்டில் புதிய அத்தியாயத்தை திறக்கும் வகையில், அவரது புகைப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொண்ட தளபதியவர்கள் படையணியினருக்கு ஆற்றிய உரையின் போது படையினரின் முன்னேற்றத்திற்கு அவசியமான கருத்துக்களையும் பாராட்டுக்குரிய வகையிலான அவரது சேவையின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து படையினருக்கான உரையினை நிகழ்த்திய அவர் இராணுவத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தன்னுடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

அதனையடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் அதிகாரவனையற்ற அதிகாரி மற்றும் சார்ஜன்களுக்கான உணவறையில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் தலைமையகதிற்கான நுழைவு வளாகத்தின் இருமருங்கிலும் அதிகாரிகள் மற்றும் படையினர் அணிவகுத்து வழங்கிய மரியாதைக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரியவர்கள் தலைமையக்த்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகாரிகளுக்கான உணவறையில் தளபதிக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரத்துடன் பிரியாவிடை நிகழ்வு நிறைவு கண்டது. இதன்போது சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதம அதிதி மகிழ்ச்சியுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

அதேநேரம் பிரதம அதிதியின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பிரதி தளபதியவர்களினால் விஷேட நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரியாவிடை நிகழ்வில் பிரதம அதிதியவர்கள் படையினருக்கு ஆற்றிய உரையின் போது, தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பிரதி தளபதி உட்பட படையினர் சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். அதனையடுத்து மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக நியமனம் வகித்த காலப்பகுதியில் சிறப்பான நினைவுகளை விருந்தினர் பதிவேட்டில் குறிப்பிட்டார்.