Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2022 17:27:22 Hours

படையினருக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடைகளை கொண்டு உலர் உணவு பொதிகள் விநியோகம்

தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூரிலுள்ள Keen Meng Lang Foundation நிறுவனங்களின் தலைவரான வண. தலகல ஸ்ரீ சுமனரத்தன தேரர் அவர்களின் நிதி உதவியை கொண்டு, 30 மே 2022 அன்று அம்பாறையின் திருக்கோவில் மற்றும் தம்மான பிரதேச செயலாளர் பிரிவு பகுதிகளில் வசிக்கும் குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பகிர்ந்தளிக்கப்பட்ட பொதிகளில் அரிசி, பருப்பு, பால் மா உட்பட மொத்தம் 275 உலர் உணவு பக்கெட்டுகள் அங்கியிருந்ததோடு, தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் ஸ்தாபகரும் மற்றும் சிங்கப்பூரிலுள்ள Keen Meng Lang Foundation நிறுவனங்களின் தலைவருமான வண. தலகல ஸ்ரீ சுமனரத்தன தேரர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சம்பத் பெர்னாண்டோ மற்றும் 242 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.