Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2022 23:29:57 Hours

புதிய பதவி நிலை பிரதானிக்கு படையணி தலைமையகத்தில் மரியாதை

இலங்கை இராணுவத்தின் 60 வது பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் புதிய நியமனத்தை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர் சனிக்கிழமை (11) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்திற்கு வருகை தந்த வேளையில் படையணியினரால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது படையணி வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த சில்வா அவர்களால் பிரதம அதிதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் அணிவகுப்பு சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இலங்கை இலேசாயுத இலேசாயுத காலாட் படையணி தலைமையக படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து, படையினரின் மெல்லிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அதனையடுத்து குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, வீரமரணம் அடைந்த இலங்கை இராணுவ இலேசாயுத காலாட்படை போர் வீரர்களுக்கான நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, இலங்கை இராணுவ காலாட்படை போர்வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவுகூறும் வகையில், புதிய பிரதி பதவி நிலை பிரதானி, நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிய கோட்போர் கூடம், சிற்றுண்டிசாலை வளாகம் மற்றும் படையினருக்கான உணவகம் ஆகியவற்றிற்கு எளிதாகச் செல்லும் வகையில் புதிதாக நிறுவப்பட்ட மின் உயர்த்தி (லிப்ட்) புதிய பிரதி பதவி நிலை பிரதானி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட்படையின் படையணியினருக்கான உரையொன்றை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள், இராணுவம் மற்றும் நாட்டின் நலன்களுக்காக இலங்கை இராணுவ இலேசாயுத காலாட்படை படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய வகிபாகம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதனையடுத்து கோப்ரல்களுக்கான உணவறையில் நடைபெற்ற அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் மற்றும் படையினருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

இலங்கை இலேசாயுத இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இருந்து வெளியேறும் முன்னதாக, பிரதி பதவி நிலை பிரதானி அவர்கள் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கான விஜயத்தின் நினைவம்சமாக விருத்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

இலங்கை இலேசாயுத இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.