Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2022 12:40:07 Hours

ஸ்ரீ மஹா போதி, ருவன்வெலி சாய மற்றும் பல புனித தலங்கள் பலவற்றில் தளபதிக்கு ஆசிர்வாதம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடுகளுக்காக சனிக்கிழமை (11) சென்றிருந்த இலங்கை இராணுவத்தின் 24 வது இராணுவ தளபதியவர்களும் அவரது குடும்பத்தினரும் சில மணித்தியாலங்களில் அநுராதபுரம் நகரை சென்றடைந்திருந்தனர்.

இதன்போது 'அடமஸ்தான' தலத்தின் மகா சங்க தேரர்கள் மற்றும் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான தலைமை மகா சங்க தேரரான பல்லேகம சிறினிவாசபிதான தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுகொண்டதன் பின்னர் விகாரைகளுக்கான காணிக்கைகளையும் வழங்கினர். அதேபோல் ருவன்வெலிசாய விகாரையின் மகாநாயக்க தேரர் வண.பள்ளேகம சிரிசுமண ரத்தனபால ஹேமரத்ன நாயக்க தேரர் மற்றும் மிரிசவெட்டிய விகாரையின் மகாநாயக்க தேரர் வண.ஈத்தலவெதுனுவே ஞானதிலக தேரர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் இராணுவத் தளபதி, அவரது மனைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புனித ஜயஸ்ரீ மஹா போதிய, ருவன்வெலி மகா சேய மற்றும் மிரிசவெட்டிய தூபி ஆகியவற்றிற்கு காணிக்கைகளை வழங்கினர். அதனையடுத்து மகா சங்கத்தின் உறுப்பினர்களால் இராணுவ தளபதியவர்களுக்கு “அனுசாசன” அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, குடும்ப உறுப்பினர்கள், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.