Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2022 18:45:58 Hours

நேர்மை குணத்தை வெளிப்படுத்திய இராணுவச் சிப்பாய்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 61 படைப்பிரிவின் 613 பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் என்.ஏ. விதாரண தனது நேர்மை பண்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் கண்டெடுத்திருந்த பணப்பை ஒன்றை உரிமையாளரான ஆசிரியரிடம் கையளித்தார்.

மாத்தறை இராணுவ முகாமின் நலன்புரி வியாபார நிலையத்தில் 183,000 ரூபா பணம் மற்றும் 41,300 ரூபா பெறுமதியான காசோலையும் இருந்த குறித்த பணப்பையை மேற்படிச் சிப்பாய் கண்டெடுத்திருந்தார்.

மேற்படி சிப்பாயின் நேர்மை மற்றும் உண்மை உள்ளத்திற்காக 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்டார்.