Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2022 17:28:27 Hours

பொலிஸ் தலைமையகத்தில் புதிய இராணுவ தளபதிக்கு பொலிஸ் மரியாதை

இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியினை பொறுப்பேற்ற பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (10) காலை பொலிஸ் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிஸார் அடங்கிய குழுவினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அளிக்கப்பட்டது.

தலைமையகத்தின் நுழைவாயிலில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்று அணிவகுப்பு மரியாதைக்கு அழைத்துச் சென்றார்.

அணிவகுப்பு கட்டளை அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அணிவகுப்பினை பரிசீலித்ததன் பின்னர் சிறப்பு மேடையில் இருந்து மரியாதையினை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பொலிஸ் தலைமையகத்திற்கு பிரதம அதிதியை அன்புடன் வரவேற்று பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்குச் சென்றார்.

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில், இருவரும் பரஸ்பர நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிற விடயங்கள் குறித்து கலந்துரையடினர். இக் கலந்துரையாடலின் போது பல சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச் சுமூகமான கலந்துரையாடலின் முடிவில், புதிய இராணுவத் தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் தனது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதன் பின்னர், பொலிஸ் தலைமையகத்தின் பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பொலிஸ் மா அதிபர் திரு.சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதன் மூலம் நிலவும் நல்லுறவு அடையாளப்படுத்தப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.