07th June 2022 19:57:40 Hours
10 வது (தொ) இலங்கை பொறியில் படையணியினரால் உற்பத்தி செய்யப்பட்ட 8000 கிலோகிராம் சேதன பசளை, திங்கட்கிழமை (06) சூரியவெவவில் வைத்து வரையறுக்கப்பட்ட சிலோன் உர (லங்கா பொஹொர) நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.
10 (தொ) இலங்கை பொறியியல் படையணின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்பீஏ ரோஹன அவர்களின் வழிகாட்டலின் கீழ், 8 டொன் சேதன பசளை தொகையை உற்பத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
10 (தொ) இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள், படையினருடன் சிலோன் உர நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.