Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2022 13:52:21 Hours

இராணுவ வீரர்கள் கேனோயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டில் வெற்றி

ஜூன் 3 முதல் 5 வரை தியவன்னாவில் இலங்கை கனோயிங் மற்றும் கயாக்கிங் தேசிய கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய கனோயிங் மற்றும் கயாக்கிங் போட்டி - 2022 இல் சாம்பியன்ஷிப்பை இராணுவ வீரர்கள் தட்டி சென்றனர்.

இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் (ஆண்கள்) 10 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதேவேளை, இலங்கை இராணுவ வீராங்கனைகள் 8 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி தேசிய போட்டியில் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில், இராணுவ வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் சாம்பியன்ஷிப்பைப் பெற்றதன் மூலம் இந்த போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.