06th June 2022 13:55:21 Hours
30 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை சிங்கப் படையணியின் கேணல் எச்.எஸ்.ரத்நாயக்கவின் இராணுவ இறுதிக்கிரியைகள், அவரது இராணுவத் தோழர்கள் மற்றும் ஏனைய பெருந்திரளான மக்கள் திரளுக்கு மத்தியில், சனிக்கிழமை (4) பிற்பகல் மாஹய்யாவ மயானத்தில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன ஆகியோர் இவ் இறுதி சடங்குகளில் கலந்துகொண்டனர். இராணுவ மரபுகளின்படி படையினரால் துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியில் போர்த்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பூதவுடலை கல்லறை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது தோல்களால் சுமந்தனர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் பேழையை சம்பிரதாயமாக பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து நின்ற பிறகு, மயானத்தை நோக்கி அணிவகுத்தனர்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் பகுதி I ஆணை, துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தினர், பின்னர் அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தினர், இது ஓர் இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியாகும்.
இறுதி சில நிமிடங்களுக்குப் பிறகு, உயரிய சிப்பாய் இப்போது அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி அழைப்புடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அதன் பின்னர், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, துயரமடைந்த குடும்பத்தினருக்கு அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மறைந்த கேணல் எச்.எஸ் ரத்நாயக்க தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் பல பதக்கங்களைப் பெற்றிருந்தார், மேலும் அவரது இறுதிச் சடங்குகள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன.