Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2022 13:57:29 Hours

யாழ் பாதுகாப்பு படை தலைமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியைப் பார்க்க பெரும் கூட்டம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 மற்றும் 52 வது படைப்பிரிவுகள் இணைந்து யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின்படி பதினொரு வீரர்களை கொண்ட ‘எஸ். நாகரத்தினம் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (4) தையட்டி ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

இளைஞர்கள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களிடையே நல்லுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், தையட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அணிக்கும் பெல்மைரா கழக கிரிக்கெட் அணிக்கும் இடையிலான, இறுதிப் போட்டியைக் காண மைதானத்தில் குவிந்திருந்த கிரிக்கெட் பிரியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடும் மோதலுக்குப் பிறகு, தையட்டி ஸ்டார் விளையாட்டு கழக கிரிக்கெட் அணி எதிரணி பெற்றுக் கொண்ட 12 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 79 ஓட்டங்கள் எனும் இலக்கை 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டு இழப்பிற்கு 85 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

இப்போது வருடாந்த நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நிகழ்வினை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் முயற்சியில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இசைக்கலைஞர்களால் வழங்கப்பட்ட பின்னணி பாப்பரே இசையும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு ஸ்ரீயா ஸ்ரீ, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 51 மற்றும் 52 வது படைபிரிவுகளின் தளபதிகள், பிரிகேடியர் பொதுபணி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மைலிட்டி கிராம சேவையாளர் திருமதி எஸ். நாகரத்தினம், படையினர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் இப் போட்டியை கண்டுகளித்தனர்.