Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2022 17:41:49 Hours

64 வது படைப்பிரிவு சிப்பாய்கள் சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவுப் பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் மே 27 தொடக்கம் – ஜூன் முதலாம் திகதி வரை முல்லைத்தீவு பிரதேசத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிய நேர உணவுப் பொதிகளை இலவசமாக வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூகத் திட்டமானது 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி வீரகோன் மற்றும் அவரது படையினரின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது.