Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2022 11:38:15 Hours

பொத்துவில் மாணவர்களுக்கு இராணுவ உதவியுடன் ஊக்கத்தொகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழுள்ள 242 வது பிரிகேடின் 23 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களினால் பொத்துவில் சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேரந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், எழுதுவினைபொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டன.

ராஜகிரிய பிஎம்ஐஎஸ் பிரைவட் லிமிடட் (BMIS Pvt Ltd) நிறுவத்தின் நிதி உதவியை கொண்டு, 350,000.00 ரூபாய் பெறுமதியான மேற்படி பரிசு தொகுதி 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சம்பத் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின்படி கிராம சேவை அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் 114 மாணவர்களுக்கு இத்திட்டத்தில் பாடசாலை பைகள், சிஆர் புத்தகங்கள், கணிதக் கருவிகள், கார்பன் பேனாக்கள், வரைதல் தாள்கள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

242 பிரிகேட் சிப்பாய்கள் கல்விசார் ஊழியர்களின் உதவியுடன் மேற்படித் திட்டத்ததை மேற்கொண்டிருந்தனர்.

பிரிகேட் தளபதி, வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், 242 வது படைப்பிரிவின் சிவில் அலுவல்கள் அதிகாரி, 23 இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் படையினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.