Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2022 17:05:15 Hours

புதிய இராணுவச் செயலாளராக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் 49 வது செயலாளராக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று (03) காலை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் அஜித் கொலம்தந்திரி அவர்களின் ஓய்வையடுத்தே இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய அலுவலகத்திற்கு வருகைத்தந்த புதிய இராணுவச் செயலாளர் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணம் மற்றும் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இவர் மேற்படி நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்பாக யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகதின் கீழுள்ள 51வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் வகித்தார்.

இவர் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் நிரந்தர படை உள்வாங்கல் பாடநெறி 87 மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் உள்வாங்கல் பாடநெறி 31 ஆகியவற்றில் தனது அடிப்படை இராணுவ பயிற்சியினை நிறைவு செய்த பின்னர் அவர் 2வது லெப்டினன்ட் அதிகாரியாக நியமனம் பெற்ற பின்னர் கஜபா படையணியின் காலாட்படை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

அவர் 2007 - 2008 இல் ஹைட்டியில் ஐநா அமைதிகாக்கும் பணிக்குழுவின் பதவிநிலை அதிகாரியாகவும், ஐநா சிவில்-இராணுவப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்ற போரில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலைப் பாராட்டி, ரண விக்கிரம பதக்கம் (RWP), ரண சூர பதக்கம், மேற்படி இரு பதக்கங்களையும் அவர் இரண்டு முறைகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள 511 பிரிகேட் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக பதவி வகித்து அதே பல்கலைக்கழகத்தின் மூலோபாய கற்கைகள் திணைக்களத்தின் முதல் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் (DSCSC இல 4)இல் psc பட்டம் பெற்றுள்ளார். தற்போது, மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைமானி/கலாநிதி கற்கைநெறிகளை தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியாவின் கல்விச் சிறப்பு விருது வழங்கும் விழாவில், ஆசியாவின் கல்வித் தலைமைத்துவ விருது - 2015 அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், தேசிய பாதுகாப்பு உத்திகள், தனிப்பட்ட மேம்பாட்டுத் தொகுதிகள் மற்றும் மென் திறன்கள் பற்றிய விரிவுரைகளை உள்நாட்டிலும் மாலத்தீவிலும் நடத்தியுள்ளார்.

மாத்தளை விஜயா கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியின் பெருமைக்குரிய மாணவரான மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, புவிசார் அரசியல், தலைமைத்துவம், மூலோபாயக் கற்கைகள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற இராணுவ அதிகாரியாகவும் சர்வதேச ஆராய்ச்சி (IR) களத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பல்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்குகிறார்.

இவர் இராணுவ ஊடகப் பணிப்பகத்தின் 17 வது பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.