Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2022 16:50:30 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி புதிய தளபதிக்கு வாழ்த்து

இராணுவத்தின் 24 ஆவது தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடமைகளை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர், தனது முன்னோடியும் முப்படைகளின் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வெள்ளிக்கிழமை (3) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அனைத்து இலங்கையர்களாலும் போற்றப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தை வழிவகுப்பதற்கு வலிமை கிட்ட வேண்டுமெனவும் வாழ்த்தினார். அதேபோல் “இராணுவ முன்னர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” ஐந்தாண்டு திட்டத்தின் கொள்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து நல்லெண்ண சந்திப்பின் அடையாள அம்சமாக ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறும் முன்பாக விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.