Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2022 11:45:46 Hours

சூரியவெவவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் 600 உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

வண. தலகல ஸ்ரீ சுமணரதன தேரர் தலைமையிலான ஒன்றிணைந்த ஸ்ரீ சித்தார்த்த சாசன பாதுகாப்புச் சபை மற்றும் களுத்துறை அறக்கட்டளை நிறுவனங்களின் ஏற்பாட்டில் சூரியவெவ பிரதேசத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ரூ. 1500.00 பெறுமதியான 600 உலர் உணவுப் பொதிகள் விநியோக திட்டம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.

பிரதேசத்தின் வறிய சமூகங்களின் தேவையை அறிந்து 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களினால் இத்திட்டம் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்ததோடு, மேற்படி பொதிகளில், 2.8 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனி மற்றும் இரண்டு சோயா மீட் பெக்கெட்டுகள் ஆகியன உள்ளடங்கியிருந்தன.

சூரியவெவ உதவி பிரதேச செயலாளர், 12 வது படைப்பிரிவின் தளபதி, 12 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர், சூரியவெவ வைத்தியசாலையில் அரச மருத்து அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள், சூரியவெவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, மற்றும் பயனாளிகள் 600 பேரும் மேற்படி விநியோக நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.