Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2022 21:30:53 Hours

மறைந்த மேஜர் ஜெனரல் Y பாலரத்ன ராஜா (ஓய்வு) அவர்களுக்கு இராணுவ மரியாதை

32 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் Y.பாலரத்ன ராஜா VSV USP ndc (ஓய்வு) அவருக்கு இராணுவ இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (2) பிற்பகல் பொரளை பொது மயான பூமியில் அவரது இராணுவ தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியை பிரதிநிதிப் படுத்தும் வகையில், இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், முதன்மைப் பணியாளர்கள் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனையோர் மறைந்த அதிகாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இராணுவ மரபுகளின்படி படையினர் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டியை எடுத்து சென்று துப்பாக்கி வண்டியில் வைத்ததனை தொடர்ந்து கல்லறை நுழைவாயிலுக்கு எடுத்து சென்றனர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், மூத்த அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து நின்ற பிறகு, சுடுகாட்டை நோக்கிச் சென்றனர்.

இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் ஆணை பகுதி I குறித்த துக்க நிகழ்வில் வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர், பின்னர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன் அவருக்கு ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது.

கடைசி சில நிமிடங்களின் பின்னர், மறைந்த சிரேஷ்ட அதிகாரி அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி அழைப்பு எழுப்பப்பட்டதுடன் அவரது பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், ஆயுதப் படைகளின் பொதுவான பாரம்பரியமான முறையின் பிரகாரம் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள், மேஜர் ஜெனரல் பாலரத்ன ராஜா (ஓய்வு) தனது புகழ்பெற்ற பணியின் போது சம்பாதித்த அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

மறைந்த மேஜர் ஜெனரல் Y பாலரத்ன ராஜாவின் இறுதிக் கிரியைகள் இராணுவ நிறைவேற்று அதிகார அலுவலக கிளையின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு ஆணை பகுதி 1 பின்வருமாறு