Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2022 21:52:04 Hours

புதிய இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு செயலாளர் வாழ்த்து தெரிவிப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 24 வது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வியாழக்கிழமை (2) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன புதிய நியமனம் பெற்றுக் கொண்டமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே நேரத்தில் இருவரும் முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.