04th June 2022 12:32:29 Hours
இலங்கையின் 24 வது இராணுவ தளபதியாக பதவியேற்றதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது முதல் விஜயமாக இன்று (2) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சில கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மரியாதை நிமித்தமான விஜயத்தை நினைவுகூர்ந்து ஜனாதிபதிக்கு நன்றி மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.