Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2022 16:37:40 Hours

கெமுனு ஹேவா படையணியின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்கள், மத வழிபாடுகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (மே 13) குருவிட்ட கெமுனு ஹேவா படையணியின் 22 வது படையணி தளபதியாக பதவியேற்றார்.

அதனையடுத்து, சமய வழிபாடுகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் மகா சங்கத்தினரின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மறுநாள் (14) படையணியின் புதிய தளபதியின் வருகையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. வருகை தந்த புதிய தளபதிக்கு படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்னவினால் வரவேற்கப்பட்டு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இராணுவ மரபுகளுக்கு ஏற்ப படையணியின் அணிவகுப்பு மைதான வளாகத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது, அங்கு படையணியின் தளபதி, படையணியின் நிலையத் தளபதியுடன் இணைந்து அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்தார்.

அன்றைய இறுதி நிகழ்வாக, படையணியின் புதிய தளபதி, வளாகத்தின் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணியில் அமைந்துள்ள உயிர்நீத்த வீரர்களின் நினைவுத்தூபியில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர் , அனைத்து படையினர்களுடன் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன் ஹைலேண்டர்ஸ் பாரடைஸ் மண்டபத்தில் அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றினார்.

படையணியின் புதிய தளபதகை்கு படையணியின் நிலையத் தளபதி, அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படையணியில் உள்ள சிப்பாய்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.