Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2022 16:34:20 Hours

படையினரால் வெள்ள நிவாரணப் பணிகள்

கடந்த 48 மணித்தியாலத்தில் நாடு முழுவதும் பெய்ந்து பிற்பகல் புதன்கிழமை (1) முடிவடைந்த அடைமழை காரணமாக வீதிகள், வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், படையினர். அரச நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மீட்ப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 12 இலங்கை பொறியியலாளர்கள் படையினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தும் பாதையை எளிதாக்கியதுடன், வெள்ள நீர் உள்ள இடங்களில் சிக்கியிருந்த க.பொ.த. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பாதுகாப்பான முறையில் வெளியேற்றினர்.

இதேவேளை, பியகம பிரதேசத்தில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட யாதவத்த, மடிய மற்றும் கெமுனு மாவத்தை பிரதேசங்களில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப்பிரிவின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அதே பகுதியில் வீதியின் குறுக்கே விழுந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்றினர்.