Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2022 16:29:58 Hours

வெளிநாட்டு நன்கொடையளர்களின் உதவியுடன் இராணுவத்தினரால் வீடு நிர்மாணிப்பு

அடிலெய்டில் உள்ள“Wellbeing SA Inc”உறுப்பினர்கள் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஓய்வு பெற்ற இலங்கை பொறியியலாளர்கள் ஆகியோரின் கூட்டு அனுசரணையனையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள 651 வது பிரிகேட் பிரிவின் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலட்படையினரின் ஒத்துழைப்பில் உயிலங்குளத்தில் உள்ள வறிய குடும்பத்திற்கு மேலும் ஒரு வீடு வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 651 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டாரவினால் ஒருங்கிணைக்கப்பட்டது. 17 வது (தொ) இலேசாயுத காலட்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.ஏ.என்.டி. அதுருகிரி அவர்கள் கட்டுமானப் பணிகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டார், மேலும் 17 வது (தொ) இலேசயுத காலட்படையணியின் படையினர் கட்டுமான பணிகளுக்கு மிகவும் தேவையான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் மனிதவளத்தை வழங்கினர்.

651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டாரவின் வேண்டுகோளுக்கு இணங்க, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்க முன்வந்தனர்.

வியாழன் (26) இடம்பெற்ற இவ் வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்தபண்டார, 17 வது (தொ) இலங்கை இலேசயுத காலட்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.ஏ.என்.டி. அதுருகிரிய, சிரேஷ்ட அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிர்மாணப் பணிகளுக்குத் திறமைகளை வழங்கிய படையினர் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, தங்குமிடமின்றி தவிக்கும் பயனாளிக்கு வீட்டு சாவியும் சில பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.