01st June 2022 16:25:06 Hours
ஒரு பெண் நன்கொடையாளரின் அனுசரணையுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 11 வது பட்டாலியன் இலங்கை தேசிய காவலர் படையணியின் சிப்பாய்கள் அம்பாறை தமன பொதுப் பகுதியில் குறைந்த வருமானம் பெறும் 50 கர்ப்பிணி பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குழந்தைக்களுக்கு தேவையான பொருட்களை செவ்வாய்க்கிழமை (24) வழங்குவதற்காக ஏற்பாடு செய்தனர்.
தமன கலாசார மண்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் திருமதி உத்யானி முனசிங்க மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டதுடன் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பயனளிக்கும் இந்த சமூகத் திட்டத்தின் போது வரிய குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் அந்தந்த கிராமசேவை அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பினையும் வழங்கினர்.
241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன், 11வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.ஜி.என்.டி வீரசிங்க, மற்றும் 241 வது படையணியின் சிவில் விவகார அதிகாரி மேஜர் கே.எஸ் ஹரிசேன மற்றும் சிப்பாய்கள் இந்த சமூக திட்டத்தில் இணைந்து கொண்டனர்.