Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2022 17:08:50 Hours

"கண்ணியத்துடனேயே செயல்பட்டேன் புதிய பொறுப்புகளையும் கண்ணியத்துடன் மேற்கொள்வேன்" - இராணுவத்தின் வெளியேறும் தளபதி

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்கும் பொருட்டு இராணுவ தளபதி பதவியில் விடுகைப் பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா தனது 39 ஆண்டுகால வாழ்க்கையில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்துள்ள இராணுவத்தில் அதிக பதக்கங்களைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரி தாம் எனத் தெரிவித்தார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு;

அபிமானம் மற்றும் பெருமிதம் கொண்ட இலங்கை இராணுவத்தில் 39 வருட காலம் சேவையில் 23 வது இராணுவ தளபதி பதவியிலிருந்து விடுகைபெறும் உணர்வுபூர்வமான சந்தர்பத்தில் உங்கள் முன்னிலையில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் நாளைய தினம் இலங்கை இராணுவத்தின் 24 வது இராணுவ தளபதியாகவும் கடமைகயை பொறுப்பேற்றகவுள்ள இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.

அதேபோல், பதவியேற்கவிருக்கும் புதிய இராணுவ தளபதிக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். நான் இராணுவ தளபதி பதவியிலிருந்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானி பதவியை ஏற்றுக்கொள்வதையிட்டு மிகவும் பெருமிதம் கொள்வதோடு திருப்தியும் அடைகிறேன். நான் இந்த பதவியிலிருந்து விடுகை பெற்றுச் சென்றாலும் எனது அன்பும் மற்றும் அரவணைப்பு இராணுவத்திற்காக என்றும் இருக்கும் என்பதோடு நாட்டினதும் நாட்டு மக்களின் பாதுகாவலனாக விளங்கும் இலங்கை இராணுவம் எதிர்கால முன்னேற்றத்தை என்றும் விரும்புவனாக இருப்பேன்.

இந்த சந்தர்பத்தில் இராணுவத்திற்காக நான் ஆற்றிய சேவைகள் தொடர்பில் நீண்ட நேரம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும், இராணுவத்திலிருந்து விடுகை பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் 23 வது இலங்கை இராணுவத் தளபதியாக எனது நோக்கம் மற்றும் எனக்கு இராணுவத்தை வழிநடத்திச் செல்ல தேவையாக இருந்த இடம் தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டியது எனது கடமையென நினைக்கிறேன். அந்த நோக்கத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் முழுமையாக மாற்றியமைப்பதற்கும் பொறுப்புக்களை இன்று முதல் நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

எனது இராணுவ வாழ்க்கையின் ஆரம்ப காலம் தொடக்கம் காலாட் படையணியின் அதிகாரி என்ற வகையில் என தாய் நாட்டினதும் அதன் மக்களுக்காகவும் அர்பணிப்புடன் செயற்பட்டதோடு, நம்பிக்கை, பக்கச்சார்பின்மை மற்றும் அதிகாரியொருவர் வசம் இருக்க வேண்டிய ஒழுக்கம் மற்றும் திருத்தமாக பணிகளை செய்தல் போன்ற பண்புகளை எனது இருப்புக்கான அடிப்படை காரணிகளாக மாற்றிக்கொண்டேன். பயிலிளவல் அதிகாரியாக பயிற்சி பெற்று இரண்டாம் லெப்டினன் அதிகாரியாக அதிகாரவாணை பெற்ற பின்னர் கஜபா படையணியில் இணைந்துகொண்ட முதல் அதிகாரி என்ற வகையில், இராணுவ வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் எனது முதல் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மிகவும் போற்றத்தக்க இலங்கை இராணுவ அதிகாரிகாரி மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் வழிநடத்தலின் கீழ் ஆளுமையுடன் மேம்பாடுகளை அடைவதற்கும் எனக்கு வாய்ப்புக்கள் கிட்டின. அவ்வாறு வலுவடைந்த எனது சேவை காலத்தில் ஒருபோதும் சந்தேகத்துக்கிடமான நடத்தைகள், அடிபணியும் ஆளுமை, நம்பிக்கையின்மை தன்மைகள் என்பனவும் இருக்கவில்லை. மேலும் தற்போதைய ஜனாதிபதியான அதிமேதகு கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் எனது பயணத்தின் சிறப்பான முன்னுதாரணங்களுக்கு பாத்திரமானவர் என கூற விரும்பும் அதேவேளை நான் குழுக்களுக்கு பொறுப்பான அதிகாரியாக கடமைகளை ஆரம்பித்த போது எனது, முதலாவது குழுவிற்கு பொறுப்பான சார்ஜண் ஜெயசுந்தரகே தொடக்கம் என்னுடன் இன்றுவரையில் கடமையாற்றும் சகல அதிகாரிகாரிகள் மற்றும் படையினர் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

23 வது இராணுவ தளபதியாக, பலரும் முடியாதவை என்று கூறும் அனைத்து விடயங்களையும் முடிந்தவையாக மாற்றிக்கொள்வதே எனது கொள்கையாக இருந்தது. அதற்காக இராணுவத்தினரின் அறிவு, அனுபவம், வளங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டேன். அதேபோல் அடைய முடியாத இலக்குகளை அடைந்துகொள்ளவும், மிக கடினமாக பணிகளை பொறுப்பேற்கவும், “இயலாதவை ஒன்றுமில்லை” என்பதை உறுதிப்படுத்த நான் உங்கள் அனைவரையும் வலுவூட்டினேன். அதற்காக அவசியமான சக்தி மற்றும் தைரியம், ஆலோசணை, வழிகாட்டல்கள், தலைமைத்துவம் ஆகியவற்றை தொடர்ச்சியாக வழங்கியிருந்தேன். அதற்காக உங்களுக்கு அவசியமான அதிகாரங்களையும் மனோநிலையை தக்க வைத்துக்கொள்ள அவசியமான தேவைப்பாடுகளை பெற்றுகொடுக்கவும் வழிசெய்தேன். இலங்கை இராணுவத்தை சிறப்புமிக்க அமைப்பாக மாற்றுவதற்கும் நாட்டு மக்கள் இராணுவத்திடம் எதிர்பார்க்கும் விடயங்களை பின்வாங்காமல் மேற்கொள்வதற்கும் பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்தியதோடு தேவைகளை அறிந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்துகொண்டேன். அதன்படி நான் இராணுவ தளபதியாக பதவியேற்ற உடனேயே எனது நோக்கத்தை அர்த்தமிக்கதாகும் வகையிலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இராணுவத்தின் நிலையை மேம்படுத்தவும் இராணுவத்தினரின் நலன்புரிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நான்கு பிரதான எண்ணக்கருக்களை அறிமுகப்படுத்தியிருந்தேன். அந்த எண்ணக்கருக்களை முழுமைப்படுத்திக்கொள்வதற்கு அவசியமான தேசிய பாதுகாப்பு, தேசத்தை கட்டியெழுப்புதல், நல்லிணகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இராணுவத்தின் கல்வி மற்றும் திறன்விருத்தி மற்றும் அனைத்து நிலையினருக்குமான தொழில்திறன்களை விருத்தி செய்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறவிருப்போர் மத்தியில் ஓய்வின் மீதான நாட்டத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட 4 கட்டங்களின் கீழ் இராணுவத்தை கட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். இந்த இலக்குகளை எட்டிக்கொள்வதற்காகவே பிற்காலங்களில் “தொழில் திறன், நம்பிக்கை தன்மை மற்றும் கௌரவம் மிக்கதான வலுவான இராணுவம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை இராணுவ வரலாற்றில் முதன் முறையாக “இராணுவ முன்னநகர்விற்காக மூலோபாய திட்டமிடல் 2020 - 2025” அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அவசியமான அகளை வழங்கவும், சில சமயங்களில் உங்கள் பின்னாலிருந்து வலுவூட்டவும், தவறுகள் நேரும் போது அவற்கை திருத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு எல்லா முயற்சிகளையும் சாத்தியமாக்கிகொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததை நினைவூட்டுகிறேன். இங்கு எனக்கு சில சில கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டிருந்ததையும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும் உங்கள் சகலரையும் பாதுகாக்கவும், உங்கள் எதிர்கால பயணத்திற்கான பாதையை பாதுகாத்துகொள்வதற்கும் நீங்கள் பயணிக்க வேண்டிய இலக்குகளை அடையச் செய்யவும் தொடர்ச்சியாக நடவடிக்கைகயை மேற்கொண்டிருந்தேன். நீங்கள் இராணுவத்தில் அடைவேண்டியதாக காணப்பட்ட இலக்குகள் எனது தலைமைத்துவத்தின் கீழ் நீங்கள் இன்று இருக்கின்ற இடம் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை நான் உங்கள் மீதே சாட்டுகிறேன்.

எனது 39 வருட சேவைக் காலத்தில் அதிகமான காலத்தை இலங்கைத் தீவை ஆற்கொண்டிருந்த கொடூரமான பயங்கரவாதத்தை இந்நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மத்தியில் யுத்த வெற்றிக்காக பெரும் பங்களிப்புக்களை வழங்கிய கஜபா படையணியின் வீரர் என்ற வகையில் நான் மன நிம்மதி அடைகிறேன். எனது சேவைக்காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது நான் கட்டளை வழங்கிய 58 வது படைப்பிரிவு தளபதி உட்பட பல்வேறு பதவி நிலைகளை வகித்த போதும் எனது கட்டளையின் கீழ் பயங்கரவாத அமைப்பின் வசமாக காணப்பட்ட பெருமளவான நிலப்பரப்புக்களை மீட்கவும் அதிகளவிலான ஆயுதங்களை மீட்கவும் அதிகளவிலான பயங்கரவாதிகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கும் தாய் நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் நில ஒருமைப்பாடு ஆகியவற்றை காப்பதற்கும் அவசியமான பல்வேறு அர்பணிப்புக்களை மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் படையினரை கௌரவத்துடன் நினைவுக்கூறும் அதேவேளை தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த போர் வீரர்களுக்கும் ஆத்ம சாந்தி கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறேன். அதேபோல் காயங்களுக்கு இலக்காகி அங்கவீனமடைந்த நிலையில் சிகிச்சைகளை பெற்றுவரும் போர் வீரர்களும் விரைவில் சுகமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

இலங்கை இராணுவம் தற்போது அடைந்துள்ள இலக்குகளுக்கு மத்தியில் மிகவும் கடினமாக பயணங்களே இருந்தன என்பதை நான் நினைவுக்கூற வேண்டிய அவசியமில்லை. அதற்காக உயிர், இரத்தம், உடல் அங்கங்கள், கண் மற்றும் ஏனைய உடற் பாகங்களை அர்பணிக்கப்பட்டமையை ஒருபோதும் மறக்ககூடாது. அதனால் இராணுவ தளபதி பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதன்மையானதும் அடிப்படையானதுமான கொள்கையாக இராணுவத்தின் அபிமானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றோடு நம்பிக்கையையும் பாதுகாப்பதோடு அவற்றை வலுவூடடிக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறேன். நான் இராணுவ தளபதி பதவியை ஏற்றுக்கொண்ட நாள் முதல் இராணுவத்தினருக்கு கண்மூடவோ ஓய்வெடுக்கவோ சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இயற்கை அனர்த்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், உள்ளிட்ட நெருக்கடிகளை குறிப்பிடலாம். இவற்றுக்கு மத்தியில் இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு தோன்றியிருந்தது. அற்காக 24 மணித்தியாலங்களும் விறுவிறுப்பாக செயற்பட வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். இராணுவ தளபதி என்ற வகையில் இந்த சவால்மிக்க சந்தர்ப்பங்களில் நாட்டு மக்கள் எம்மிடத்தில் எதிர்பார்க்கும் சேவைகளை வழங்காமல் இருக்கவோ இலங்கை இராணுவத்தின் அபிமானம் மற்றும் கட்டமைப்பை ஒருபோதும் சிதைப்பதற்கு நான் இடமளிக்கவில்லை. அந்த அபிமானம் மற்றும் நம்பிக்கைத் தன்மையை எதிர்காலத்திலும் நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என நான் நம்புகிறேன்.

கடந்த காலங்களில் எங்கள் மீதான புரிந்துணர்வுடன் செயற்பட்ட பலரும் எங்களை சூழ இருந்தனர். அதேபோல், எங்கள் அருகில் இருப்பதாக காட்டிக்கொண்டு தங்களது சுய தேவைப்பாடுகளை இலக்காக கொண்டு செயப்பட்டவர்களும் எம்முடன் இருந்தனர். அதேபோல் பல்வேறு தனிபட்ட காரணங்களுக்காக எமது தோல்விகளை காண விரும்பிய பலரும் எம்மை சூழவிருந்தனர். நான் அவர்கள் எவருக்கும் தனிப்பட்ட வகையில் சந்தர்ப்பங்களை வழங்கவோ அவர்கள் மீதான அச்சத்தில் பணிகளை மேற்கொள்ளவோ இல்லை. அதற்காக இராணுவத்திற்கு இருக்க வேண்டிய அதிகபட்ச ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்வதற்கும் நாம் செய்கின்ற அனைத்து விடயங்களின் நேர்மைத் தன்மையை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தேன். நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இராணுவத்திற்குள் சட்டங்களுக்கு பணிந்து செயற்படுதல், நியாயமாக செயற்படுதல் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றவும் செயற்பட்டேன். அது எமது திறன் வளர்ச்சியை விரும்புவோரை போலவே தோல்வியை விரும்போரும் அறிந்துகொண்டிருந்தனர் என்பதையும் நான் அறிவேன். சேவை, கௌரவம், நம்பிக்கை, வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவ தளபதி சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ளமையினால் இன்று இந்த கௌரவமிக்க பதவியிலிருந்து கௌரவமாக விடுகை பெற்றுச் செல்ல இயலுமை கிட்டியுள்ளது.

நான் பயணித்த பாதையில் பல்வேறு சவால்களுக்கு நான் முகம்கொடுத்துள்ளேன். அந்த சவால்களுக்கு முகம்கொடுக்க என்னை தயார்படுத்திக்கொள்ள அவசியமான வலுவூட்டல்களை எனக்கு வழங்கிய எனது அன்புக்குரிய தந்தை மற்றும் மறைந்த எனது தாயையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கூற வேண்டியது அவசியமாகும். அதேபோல் எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு தைரியங்களை வழங்கி எனது சுக துக்கங்களை பகிர்ந்துகொண்ட மனைவி மற்றும் மகள்மார் இருவரையும் சகோதர்கள் உள்ளடங்களான குடும்ப உறுப்பினர்களை நினைவுக்கூற அவசியமான சந்தர்ப்பமாக நான் இதனை பயன்படுத்திகொள்கிறேன். வாழ்க்கையை சாத்தியமாக்கி கொண்ட பிரஜையாகவும் இராணுவ தளபதியாகவும் என்னை கட்டமைத்துகொள்வதற்கு அவசியமான அறிவு, தெளிவு, திறன்கள் ஊடாக அடிப்படை பாதையை அமைத்துகொண்ட நான் கல்வி பயின்ற மாத்தளை புனித அந்தோனியார் பாடசாலையின் ஆசிரிய பெருந்தகைகளையும் மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் நினைவுக்கூறவேண்டியது எனது கடமையாகும். மேலும் தொடர்ச்சியாக எனக்கு அவசியமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய அனைத்து மத தலைவர்களையும் நினைவூட்டுகிறேன். இலங்கை இராணுவ வீரர்களுக்கு இயலாதவையென ஒன்றுமில்லை என்பது நிதர்சனமாகும். அது நானும் நீங்களும் நம்புகின்ற காரணியுமாகும். அதேபோல் எமது கடமைகளை ஒற்றுமை, வலுவுடன் முன்னெடுக்க கூடிய இயலுமையும் எமக்கு வழங்ககப்பட்டுள்ள பொறுப்புக்களை சாத்தியமாக்கிக் காண்பிக்கவும் எம்மால் முடியும். இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாக 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டதன் பின்னர். மேற்கூறிய விடயங்களை உண்மையாக்கும் வகையில் பணியாற்றினேன் என்ற நம்பிகை எனக்கு உள்ளது. அதேபோல், கடந்த சென்ற இரண்டு வருடங்களும் ஒன்பது மாதக் காலப்பகுதியில் இராணுவ தளபதியாக உங்களுடன் இணைந்து தாய் நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்ததையிட்டு நான் பெருமையடைகிறேன்.

கடந்த காலங்களில் நாம் சகலரும் ஒன்றாகவிருந்து கொவிட் – 19 ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம் எம்மீது சாட்டப்பட்டிருக்கும் தேசிய பொறுப்பை கருத்தில் கொண்டு தொற்று நோய்க்கு இலக்காகுவதையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் சேவையாற்றியதால் இன்றைய நிலையை நாம் அடைந்துள்ளோம். கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நாட்டின் அனைத்து நிறுவனங்களினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, அதற்காக நீங்கள் வழங்கிய அர்பணிபுடன் கூடிய பங்களிப்பை பாராட்டுகிறேன். பின்னர் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நாட்டி பசுமை விவசாய செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான பல்வேறு திட்டமிடல்களை நடைமுறைப்படுத்த வாய்ப்பு கிட்டியிருந்ததோடு, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முழு நாட்டிலுள்ள இராணுவ முகம்களும் அதற்காக வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

எமது தாய்நாட்டிற்குள் பல்வேறுபட்ட சவால்கள் காணப்பட்டாலும் இராணுவத்தின் இருப்பு மற்றும் முனநகர்வுகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தையும் உரிய வகையில் மேற்கொள்ள எமக்கு இயலுமை கிட்டியது. ஐந்தாண்டு மூலோபாய திட்டமிடலின் கீழ் வியூகங்களின் அடிப்படையிலும் காலோசிதமான மாற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாம் படையணி, பொறியியல் படையணி, விவசாய மற்றும் கால்நடை படையணி, புதிய பணிப்பகங்கள், தலைமையக பிரிகேட், ட்ரோன் படையணிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய பிரிவுகளை இராணுவ கட்டமைப்புக்குள் இணைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நான் முன்னெடுத்திருந்தேன்.

கடந்த காலங்களில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் பொறியியல் சிப்பாய்களின் பங்களிப்புடன் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பல இராணுவ வாகனங்களை புதுப்பித்து மீண்டும் பாவனைக்கு உட்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தேன். அமைதிகாக்கும் பணிகளுக்கு அவசியமான புதிய வாகனங்களை உற்பத்தி செய்தமையின் ஊடாக பெருமளவான நிதி தேசிய பொருளாதாரத்திற்கு சேமிக்கவும் அதேபோல் இராணுவத்திற்கு அவசியமான டயர்களை மீள்நிரப்பவும், கூடாரங்களை பெற்றுகொடுக்கவும், அமைதிகாக்கும் பணிகளுக்கு அவசியமான சீருடைகள், பைகள், இராணுவ சீருடைகள், தையல் உபகரணங்கள், கேஸ் அடுப்புகள், இரும்பு கட்டில்கள் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளை இராணுவ தொழிற்சாலைகளுக்குள்ளேயே தயாரிக்கும் பணிகளை நாம் ஆரம்பித்தோம். மேலும் சிறிது காலம் தாமதமாகி வந்த அமைதிகாக்கும் பணிகளுக்குச் செல்லும் வாய்ப்புக்களை படையினருக்கு மீண்டும் பெற்றுகொடுத்ததோடு, அமைதிகாக்கும் பணிகளூடாக தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சிறியளவிலான பங்களிப்பு வழங்கவும் எமக்கு இயலுமை கிட்டியுள்ளது. நான் ஐநாவின் இலங்கை தூதுவராகவும் நிரந்தர வதிவிட பிரதிநிதியாகவும் கடமையாற்றிய காலப்பகுதியில் புதிய அமைதிகாக்கும் பணி வாய்ப்புக்களை இலங்கைக்கு பெற்றுகொள்வதற்கு முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இராணுவத்தின் அனைத்து சிப்பாய்களும் தொழில் கௌரவத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இலங்கை இராணுவத்தின் பயிற்சி பாடசாலைகள் மற்றும் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பட்ட வகையில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டியது. அதேபோல் புதிய சீருடைகள் மற்றும் ஏனைய சிப்பாய்களின் தேவைப்பாடுகளையும் சிப்பாயின் தோற்றத்தை வலுவூட்டுவதற்கு அவசியமான பல சாத்தியமான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். அதேபோல் முதன் முறையாக இராணுவத்தின் அனைத்து முகாம்களிலிருந்தும் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போருடனான தொடர்பாடல்களை முன்னெடுப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப மென்பொருள் கட்டமைப்புக்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றிகொள்ள முடிந்ததோடு தற்போது அவை களப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குடும்பங்களினது நலன்புரிச் செயற்பாடுகள் அனைத்தையும் உரிய வகையில் பெற்றுக்கொடுக்கவும் முடிந்தது. பல்வேறு வீட்டுத் திட்டங்கள், விரு அபிமன வீட்டுக் கடன் திட்டம், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், இராணுவ வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் கண்டியில் புதிய வைத்தியசாலையை நிறுவுதல் மாவட்ட ரீதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் சங்கங்களை நிறுவுதல், போரில் காயமடைந்த மற்றும் உயிர்நீத்த இராணுவ வீரர் குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவுதல் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்க முடிந்ததையும் எனது அபிமானமாக கருதுகிறேன். கடந்த காலப்பகுதியில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காரணமாக தாமதமாகி காணப்பட்ட படையினருக்கான வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான சகல திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டுகிறேன். அதேபோல், இராணுவ வரலாற்றில் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் போரில் உயிர் நீத்த மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புலைமை பரீசில்களை வழங்குவதற்கான இயலுமையும் கிட்டியது. அதேபோல் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குடும்பங்களின் நலன்புரிதல்களுக்கான இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சிறப்பான பல திட்டங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன்.

இராணுவத்தினருக்கு மட்டும் மட்டுப்பட்டதாக அல்லாமல் பொதுமக்களின் நலன்களுக்காகவும் வீட்டுத்திட்டங்கள், மாணவர் நலத்திட்டங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பொதுச் சேவைகள் பலவற்றையும் முன்னெடுக்க எனக்கு வாய்ப்பு கிட்டியது. அந்த சமூக பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமாக மக்கள் சேவைகளுக்கு அதிகபட்ச பங்களிப்புக்களை வழங்குவதற்கு முடிந்துள்ளதாக நம்புகிறேன்.

எனது இராணுவ சேவைக்காலத்தில் இராணுவ தளபதிகள் பலரின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியிருந்தது. அதேபோல், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கீழ் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். அந்த சகல அதிகாரிகளும் எனது திறன் மற்றும் இயலுமைகளை அறிந்துகொண்டிருந்ததோடு என்னிடமிருந்து அதிகபட்சமாக சேவைகளை இராணுவத்திற்காக பெற்றுகொண்டனர். இதன்போது சிரேஷ்டர்களால் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றிய அதேநேரம் என் மீது நம்பிக்கை கொண்ட சிரேஷ்டர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல் என்மீது நம்பிக்கை கொண்டு இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 23 வது இராணுவ தளபதியாக நியமித்த இலங்கையின் 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் அதேநேரம், எனது சேவைக்காலத்தில் பணியாற்றிய அனைத்து பிரதமர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நான் ஜெனரல் ஆக நிலை உயர்வு பெற்றதும் இராணுவ தளபதியானதும் உங்களை போன்ற கௌவரம் மிக்க போர் வீரர்களை கொண்ட இராணுவதினாலாகும். அதன்படி நான் என்றும் நேசித்த இராணுவத்தினதும் படைவீரர்களான உங்களது நற்பெயர் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது சகலரது பொறுப்பு எனவும் வலியுறுத்துகிறேன். கடந்த நாட்களில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தாய் நாட்டிற்குள் எழுந்த சமூக அமைதியின்மை நிலைமைகளின் போது நாம் ஒழுக்கமான இராணுவத்தின் அங்கத்தவர்கள் என்ற பண்மை உலக அரங்களில் வெளிப்படுத்தியிருந்தோம். அமைதி நிலைமைகளை தொடர்ந்தும் பேணும் வகையில் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புதிய இராணுவ தளபதிக்கு நீங்கள் சகலரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இராணுவ தளபதி பதவியிலிருந்து விடுகை பெற்றுச் செல்வதால் இராணுவத்திலிருந்து விடைபெற நேரிட்டாலும் எனது நினைவுகள் என்றும் மறக்க முடியாதவையாகும். இந்த காலப்பகுதியில் இராணுவம் மற்றும் இராணுவ வீரர்களுக்காக செய்ய முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் அனைவரதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொண்டு முடிந்த வரையில் மேற்கொள்ள எனது இராணுவ தளபதி சேவைக் காலத்தில் கடமைகளை சாத்தியமாக முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்கிய இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, தொண்டர் படையணி தளபதி உள்ளடங்களாக இராணுவ பிரதான பதவி நிலை அதிகாரிகள், ஆலோசகர்கள், படையணி படைத் தளபதிகள் மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் அதிகாரிகளுக்கும் இராணுவ தலைமையகத்தின் சார்ஜண் மேஜர் உள்ளிட்ட சகல சிப்பாய்களுக்கும், சிவில் ஊழியர்களும் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறேன். எனது இராணுவ வாழ்க்கையின் முதல் எழுத்தை சொல்லிக்கொடுத்த இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கூறும் அதேநேரம். நான் இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிச் சென்றாலும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக என்னால் இராணுவத்திற்கு வழங்க முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கி உங்கள் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பேன்.

நாம் சகலரும் வெற்றிப் பெருமை கொண்ட இராணுவத்தின் உறுப்பினர்களாவோம். இது நாட்டு மக்களின் நிலையான பாதுகாவலர் என்ற பெருமையை கொண்ட இராணுவத்தின் உறுப்பினர்களான உங்களுடையதும், எனதும், எமக்கு முன்னர் இராணுவத்தில் சேவையாற்றியவர்களினதும் அர்பணிப்பினால் கிட்டிய பெருமையாகும். அதன் தற்போதைய பங்குதாரர்களாக நீங்களே உள்ள நிலையில் இந்த பெருமையை எதிர்காலத்திற்கும் கொண்டுச் செல்லும் இயலுமை உங்களிடமே உள்ளது. அதனால் நீங்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும், வெற்றி பெருமை கொண்ட இராணுவத்தின் அபிமானத்தை பாதுகாப்பதே நமது அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். அதன்படி உங்களுடைய சக்தி, தைரியம், ஒற்றுமை மற்றும் அர்பணிப்பு ஊடாக இலங்கை இராணுவத்தை வெற்றிப்பாதையில் கொண்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இராணுவ தளபதி பதவியிலிருந்து விடுகை பெற்றுச் செல்லும் முன்னதாக இலங்கை இராணுவ தளபதி என்று பெருமையுடன் கூறிக்கொள்வதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த போர் வீரர்கள் சகலருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேநேரம் இராணுவ குடும்பத்தினர் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் வேண்டுகோள்கள் சகல விதத்திலும் நிறைவேற வேண்டும் என்றும் பிரார்த்திக்கும் அதேநேரம் இலங்கை இராணுவம் நாளுக்கு நாள் மேம்பாடுகளை அடைய வேண்டுமெ பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் வெற்றிகளுடன் கூடிய எதிர்காலம் கிட்டட்டும்!