31st May 2022 14:23:33 Hours
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய இராணுவ தளபதியாக இன்று (31) ஜனாதிபதி மாளிகையில் வைத்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதன்கிழமை (01) இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு முன்னதாக இவர் இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவருக்கு முன்னதாக இராணுவ தளபதியாகவிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.