30th May 2022 17:53:48 Hours
இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதியும் இராணுவ தலைமை சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அவர்கள் 35 வருடகால முன்மாதிரியான சேவையை நிறைவு செய்துகொண்டு இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தாருடன் திங்கட்கிழமை (30) இராணுவ தலைமையகத்திலுள்ள தளபதியின் அலுவலகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பல்வேறு நியமனங்களின் கீழ் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் அவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.இராணுவ சேவையிலிருந்து விலகியதன் பின்னரான அவரது எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தளபதியவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் திருமதி சஜீவனி பீரிஸ் மற்றும் இலங்கை கடற்படையின் இளங்கலை பட்டதாரி மகனும் கடற்படை அதிகாரவாணை அதிகாரியுமான மகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதனையடுத்து ஓய்வுபெறும் அதிகாரியின் இரு பிள்ளைகளுடனும் கலந்துரையாடிய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களது எதிர்கால முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டுமெனவும் வாழ்த்தினார். அதேபோல் நாட்டின் நலனுக்கான சிரேஷ்ட அதிகாரியவர்கள் போர்க்களத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அவரது பாரியார் வழங்கிய அர்பணிப்புடன் கூடிய பங்களிப்பையும் இராணுவ தளபதியவர்கள் நினைவுகூர்ந்தார்.
ஒரு இல்லத்தரசியாக, உங்கள் கணவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் இந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் மிகவும் சவாலான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் உங்கள் பணி போற்றத்தக்கது என இராணுவ தளபதியவர்கள் தெரிவித்தார்.
வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியவர்கள் தனது சேவைக்காலத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
கலந்துரையாடலின் நிறைவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அவர்களை பாராட்டி விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.