Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2022 17:55:31 Hours

இலங்கை சிங்கப் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, இலங்கை சிங்கப் படையணியின் 16 வது படைத் தளபதியாக அம்பேபுஸ்ஸவிலுள்ள படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (23) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நடைபெற்ற இந்நிகழ்வில் படையணி தலைமையகத்திற்கு வருகைத் தந்த மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களுக்கு படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் துலித பெரேரா அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பின்னர் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் விராஜ் விமலசேன அவர்களினால் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு புதிய தளபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலங்கை சிங்கப் படையணியின் வீரம் மிக்க அதிகாரிகள் மற்றும் படையினரின் நினைவாக போர் வீரர் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பதவியேற்பின் நினைவம்சமாக படையணி தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் புதிய தளபதியவர்கள் சார்ஜண்ட்கள் மற்றும் அதிகாரவரணையற்ற அதிகாரிகள் விருந்தகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பிரதான கேட்போர் கூடத்தில் படையினர் மத்தியில் உரையாற்றிய பின்னர் அனைத்து அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

சில தினங்களுக்கு முன்னதாக மேஜர் ஜெனரல் கித்சிறி லியங்கே சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே மேற்படி புதிய நியமனம் புதியவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.