Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2022 20:19:03 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் (மே 18) போர் வீரர்கள் நினைவுத் தினத்தை முன்னிட்டு, கோணமடுவ பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் மற்றும் ஹப்புத்தலை சந்திரசேகரன் தமிழ் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த 106 பிள்ளைகளுக்கு பெருமளவான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அமெரிக்காவில் வசிக்கும் திரு அனுக் பெர்னாண்டோ அவர்கள் தாமாக முன்வந்து வழங்கிய மேற்படி உதவித் திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

106 மாணவர்கள் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.