24th May 2022 20:27:57 Hours
கொஸ்கமவில் இலங்கை இராணுவ தொண்டைர் படைத் தலைமையகத்தின் புதிய பிரதி தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்கள் திங்கட்கிழமை (23) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அங்கு வருகைதந்த புதிய பிரதி தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை படையினரால் வழங்கப்பட்டது.
ஒரு சம்பிரதாய மத சடங்குகளை பின்பற்றி மகா சங்க உறுப்பினர்களின் 'சேத் பிரித்' கோஷங்களுக்கு மத்தியில் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.
பின்னர் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மத்தியில் உரையாற்றிய புதிய பிரதித் தளபதி, இலங்கை இராணுவத்தின் நற்பெயரை உயர்த்துவதற்கு ஒரு குழுவாகச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
தனது புதிய பதவியினை பொறுப்பேற்றுக்கொள்ளும் முகமாக மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தன அவர்கள் முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.