24th May 2022 20:12:32 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப் பிரிவின் படையினர், தேவிபுரம் பிரதேசத்தில் உள்ள சமூகத்தினருக்கு உதவும் நோக்கில், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இனிய வல்லு இல்லம்’ பாடசாலையில் வசிக்கும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு சுவையான மதிய உணவை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிகழ்வில் 68 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். இந்த விசேட தேவையுடைய பாடசாலை அதிகாரிகள் இராணுவத்தின் கருணை மற்றும் சிந்தனைக்கு நன்றி தெரிவித்தனர்.