24th May 2022 21:12:37 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் கீழுள்ள 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் இன்று (24) பிற்பகல் கல்முனை மற்றும் உஹன, மல்வத்தைக்கு இடையிலான போக்குவரத்து பாதையையில் இடியுடன் கூடிய மழையின் காரணமாக சாலையோரம் மரங்கள் முரிந்து விழுந்ததை அகற்றப்பட்டன.
மழை பெய்த போதிலும், சிவில் அதிகாரிகளுடன் இணைந்து சிப்பாய்கள் சாலைப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை சிறிது நேரத்தில் வெட்டி அகற்றினர். காவல்துறையினருடன் படையினர் சாலையை போக்குவரத்தை சீர் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.