Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2022 21:32:44 Hours

கர்பிணி தாய்மாருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூறும் தினமான (மே18) நினைவுக்கூறும் வகையில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேடின் 14 வது இலங்கை சிங்கப் படையணியினரால் வசந்திபுரம் மற்றும் கருவலகண்டல் பகுதிகளில் வசிக்கும் 10 கர்ப்பிணி தாய்மாருகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாதம்பை பகுதியில் வசிக்கும் திருமதி சிறிலங்கானி பெரேரா மற்றும் திருமதி ஏஎம் இலங்ககோண் ஆகியோரின் நிதி உதவியை கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்ஐ பிரசன்ன அவர்களினால் மேற்படி பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.