23rd May 2022 21:28:13 Hours
உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் – 13, மேம்படுத்தப்பட்ட உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் – 43, மற்றும் உதவி உடற் பயிற்சி நெறி எண் - 125 ஆகியவற்றை பூர்த்தி செய்தவர்களின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) பனாகொடவில் உள்ள இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது. உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக 9 அதிகாரிகள் மற்றும் 163 சிப்பாய்கள் தகுதி பெற்றதுடன் தேசிய தொழிற்கல்வி தகைமை தரம் - 4 (NVQ – 4 ) ஐ பெற்றுககொண்ட 35 உடற்கல்வி பயிற்றுனர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் காலாட் படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் இராணுவ உடற்பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் ருக்ஷான் கண்ணங்கர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.