20th May 2022 19:15:46 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 ஆவது படைப்பிரிவின் கீழுள்ள 561 வது பிரிகேட் சிப்பாய்கள் தமது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி, கனகராயன்குளத்திலுள்ள பெரியகுளம் அரசு தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்காக அத்தியாவசியமான சமூகத் திட்டத்திற்காக குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து தமது ஆதரவை வழங்கினர்.
நீண்டகாலமாக இவ்வாறான வசதிகள் இல்லாமல் இருந்த பாடசாலை மாணவர்களின் அசௌகரியங்களை உணர்ந்து 561 வது பிரிகேட் சிப்பாய்கள் இத்திட்டத்திற்காக பத்மஹன்ச சமூக சேவை அமைப்பு அதன் செலவினத்திற்கான அனுசரணையை வழங்கியது.
56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே மற்றும் 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக ஆகியோர் இந்த சமூக நலன் சார்ந்த திட்டத்தை நெருக்கமாக ஒருங்கிணைத்ததுடன் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக, 561 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, மேஜர் நிர்வாகம் வழங்கள் அதிகாரி மேஜர் எஸ்.ஏ.ஆர்.என். பெரேரா மற்றும் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டனர்.