Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2022 19:12:24 Hours

நல்லதண்ணியவுக்கு புனித தங்ககலசம் கொண்டு வருவதற்கு படையினர் ஒத்துழைப்பு

வெசாக் பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு ‘ஸ்ரீ பாத’ பருவத்தில் சமன் கடவுளின் அடையாளச் சிலை மற்றும் புனித ஆபரணங்கள் பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக திங்கட்கிழமை (17) நல்லதண்ணியவுக்கு கொண்டு வரப்பட்டன.

பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேடின் கீழுள்ள 19 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த சுமார் 100 சிப்பாய்கள் தலைமை விகாராதிபதி வண.பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் தங்ககலசத்தினை தங்களின் தோளில் சுமந்து நல்லதண்ணியவுக்குக் கொண்டு வருவதற்கு முன்வந்தனர்.

மத்திய பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 112 வது பிரிகேட் தளபதி கேணல் சந்திம குமாரசிங்க மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த ஏற்பாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.