Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2022 19:18:45 Hours

இராணுவத்தினால் நான்காவது பூஸ்டர் தடுப்பூசி திட்டம்

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் இலங்கை மருத்துவ படையணியின் படையினர் இணைந்து பொது மக்களின் நலன் கருதி சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நான்காவது கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தினை புதன்கிழமை (18) முதல் விகாரமஹா தேவி பூங்காவில் ஏற்பாடு செய்தனர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கொழும்பு நாரஹென்பிட்டிய இராணுவ வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர், முதல் தடுப்பூசிகள் மற்றும் முவலாவது ஃபைசர் தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் தொடர்ந்தும் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகின்றனர்.

இத்திட்டமானது மேற்கு - பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இத் தடுப்பூசி திட்டமானது நெருக்கமாக மேற்பார்வை செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.