17th May 2022 18:58:33 Hours
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக நேற்று சனிக்கிழமை கல்லடி சிவானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 114 இராணுவத்தினர் மற்றும் 26 பொதுமக்கள் கலந்துகொண்டு (14) சனிக்கிழமை இரத்ததானம் செய்தனர்.
மருத்துவமனையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கு , 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 231 படைப்பிரிவில் உள்ள தனது படையினருக்கு அவசர சமூகத் தேவையாக கருதி இத்திட்டத்திற்கு உதவுமாறு பணித்தார். இதன்படி, 11 அதிகாரிகளும், 103 சிப்பாய்களும் நோயாளிகளின் நலனுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 26 பொதுமக்களும் இரத்த தானத்தில் இணைந்தனர்.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதேசத்திலுள்ள சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினர் தமது உதவிகளை வழங்கினர். இந்த ஏற்பாட்டின் போது 231 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 11 வது ( தொண்) இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்ததானம் செய்ய முன்வந்தனர்.