17th May 2022 18:54:18 Hours
கிளிநொச்சி இரணைமடு முதலாம் படையணி படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து வெசாக் தினத்தை முன்னிட்டு (15) கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள 100 வரிய குடும்பங்களுக்கு இலவச உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
முதலாம் படையணி தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், முதலாம் படையணி தலைமையகத்தின் கீழுள்ள அனைத்து பிரிவுகளின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்களின் பங்களிப்புடன் ரூபா 2500/= பெருமதியான உணவுப் பொதிகளை அவர்களின் வீட்டு வாசல்களுக்கு சென்று விநியோகிக்கப்பட்டது.
இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' அமைவாக ‘இதயம் கொண்ட இராணுவம்’ வெசாக் தினத்தின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
முதலாவது படையணியின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அசேல அமரசேகர, கேணல் பொது பணி கேணல் கமிந்த சில்வா, சிரேஷ்ட பணி நிலை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயனாளிகளை பார்வையிட்டதன் பின்னர் அந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.