Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 17:01:07 Hours

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச புதிய தளபதி பதவியேற்பு

கிழக்கின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தலைமையகத்தின் 27வது தளபதியாக பிரிகேடியர் சுகத் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (29) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தலைமையகத்திற்கு வருகையளித்த புதிய தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதற்கு முன்பு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து நிகழ்வின் நினைவுவாக வளாகத்தில் மரக்கன்று நடவும் அழைக்கப்பட்டார்.

மத அனுஷ்டானங்கள் மற்றும் 'பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், பிரிகேடியர் சுகத் ரத்நாயக்க புதிய அலுவலகத்தின் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வின் போது அனைத்து பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.