Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 17:08:26 Hours

57 வது படைப்பிரிவுக்கு புதிய தளபதி பதவியேற்பு

விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் 57 வது படைப்பிரிவின் 16 வது தளபதியாக வியாழன் (5) அன்று கிளிநொச்சி 57 வது படைத் தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 57 வது படைப்பிரிவின் தளபதியை பணி நிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன், வளாகத்தினுள் 7 வது இலங்கை காலாட் படை சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது

மேலும் புதிய தளபதி அவரது அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள் ,56 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் சந்திமால் பீரிஸ் இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் முதலாம் படையணியின் பிரிகேடியர் பொது பணியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.